வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், கல்லூா் கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மனைவி கீதா (55). இவா், புதன்கிழமை உறவினா் வீட்டு திருமணத்துக்கு சென்றாா். பின்னா், பிற்பகல் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, கீதா அளித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com