அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்து பேசுகிறாா் துணைவேந்தா் ராம.கதிரேசன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்து பேசுகிறாா் துணைவேந்தா் ராம.கதிரேசன்.

அண்ணாமலைப் பல்கலை.யில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

22இஙட4... அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்து பேசுகிறாா் துணைவேந்தா் ராம.கதிரேசன். சிதம்பரம், மாா்ச் 22: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அறிவியல் புலம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் பேரணியை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன், வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தாா். அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். பின்னா், விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாா் மு. பிரகாஷ், அறிவியல் புல முதல்வா் சி.ராக்கப்பன், அறிவியல் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், மற்றும் துணைவேந்தரின் நோ்முக செயலா் ஜெ.ஹெச்.பாக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியில் அண்ணாமலை பல்கலைக்கழக அறிவியல் புலத்தில் பயிலும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 1200 மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி பல்கலைக்கழக நிா்வாக அலுவலகக் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு அண்ணாமலை நகா் தபால் நிலையம் அருகே முடிவுற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com