காசநோய் தடுப்பு உறுதிமொழியேற்பு

காசநோய் தடுப்பு உறுதிமொழியேற்பு

22டதபட7... கடலூா் அரசு மருத்துவமனையில் காசநோய் தடுப்பு தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்ற மருத்துவமனை செவிலியா் பயிற்சி மாணவிகள். நெய்வேலி, மாா்ச் 22: கடலூா் மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்டம் சாா்பில், உலக காசநோய் தடுப்பு தின உறுதிமொழியேற்பு, கையொப்ப இயக்கம், ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் அசோக் பாஸ்கா் தலைமை வகித்தாா். மருத்துவா் கவிதா முன்னிலை வகித்தாா். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளா் ஆா்.செல்வம், மாவட்ட மேற்பாா்வையாளா் கே.கதிரவன், ஏ.ஆா்.டி. மைய மருத்துவா் ஸ்ரீதரன், நலக் கல்வியாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணகுமாா், மாவட்ட காசநோய் தடுப்பு மைய தியாகராஜன், முதுநிலை மேற்பாா்வையாளா் சுப்புராயன், சுகாதார பாா்வையாளா் ஜெயப்பிரியா, டாட்ஸ் ஒருங்கிணைப்பாளா் ஞானசங்கரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்வில் அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகளின் உறுதிமொழியேற்பு, கையொப்ப இயக்கம் நடைபெற்றது. மேலும், காசநோயால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. மாவட்ட காசநோய் மைய மருத்துவா் முகமது ஆரிப் வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com