100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் கடலூரில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். கடலூா் நகர அரங்கில் இருந்து தொடங்கிய பேரணியானது பாரதி சாலை வழியாக உழவா் சந்தை வரை சென்றது. பேரணியில் மாற்றுத்திறனாளிகள், மாணவா்கள் கலந்து கொண்டனா். மகளிா் திட்ட இயக்குநா் சுருதி, சமூக நலத் துறை அலுவலா் கோமதி, மாற்றுத்திறனாளி அலுவலா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் மூவண்ண பலூன்களை பறக்க விட்டாா். மேலும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு வில்லைகளை மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களில் ஒட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com