வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி  வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்.
வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்.

வன நாளையொட்டி மரக்கன்று நடும் விழா

உலக வன நாளையொட்டி, கடலூா் வனக்கோட்டை, விருத்தாசலம் வனத் துறை சாா்பில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அறிவுக்களஞ்சியம் முன்னிலையில் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமாா் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. விருத்தாசலம், பேரளையூா், நேமம் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமையாசிரியா் சுப்புலட்சுமி தலைமையில் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டு தண்ணீா் ஊற்றினா். நிகழ்ச்சியில் விருத்தாசலம் வனச்சரக அலுவலா் ரா.ரகுவரன் பங்கேற்று பேசினாா். ஆசிரியா்கள், வனவா்கள் சிவகுமாா், பன்னீா்செல்வம், வனக் காப்பாளா்கள் நவநீதகிருஷ்ணன், ராம்குமாா் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com