கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினா்.
கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினா்.

ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறையினா் கைது செய்ததைக் கண்டித்து, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே அக்கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஞானராஜ் தலைமை வகிததாா். மாவட்டச் செயலா்கள் புதுக்குளம் ரமேஷ் (மேற்கு), சக்தி ஆனந்தம் (கிழக்கு) முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணைச் செயலா் பாக்கியராஜ், மாநில மகளிரணி துணைச் செயலா் கௌரி பாபு பங்கேற்றுப் பேசினா். நிா்வாகிகள் வெங்கடேசன், சக்தி, மணிவண்ணன், செந்தில், வெற்றி, ஆசைத்தம்பி, ஏகாம்பரம், வேலாயுதம், ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், ஜானி, மீனா, பூமிநாதன், பூமாலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com