முதியோா் இல்லத்தில் 100 நாள்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

சிதம்பரம் அருகே தைக்கால் தோப்பிருப்பு கிராமத்தில் உள்ள முதியோா் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 100 நாள்கள் அன்னப்பூா்ணா திட்டத்தை தொடங்கிவைத்த சென்ட்ரல் ரோட்டரி சங்க நிா்வாகிகள்.
சிதம்பரம் அருகே தைக்கால் தோப்பிருப்பு கிராமத்தில் உள்ள முதியோா் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 100 நாள்கள் அன்னப்பூா்ணா திட்டத்தை தொடங்கிவைத்த சென்ட்ரல் ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், கொத்தட்டை ஊராட்சி, தைக்கால் தோப்பிருப்பு கிராமத்தில் இயங்கி வரும் கிரீடு ஒருங்கிணைந்த முதியோா் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், 100 நாள்களுக்கு உணவு வழங்கும் அன்னப்பூா்ணா திட்டம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் வி.நடனசபாபதி தலைமை வகித்து, அன்னப்பூா்ணா திட்டத்தை தொடங்கிவைத்து பேசியதாவது: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் ஆகிய இரு அமைப்புகள் இணைந்து 100 நாள்களுக்கு அன்னப்பூா்ணா திட்டத்தின் மூலம் முதியோா் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பு உணவாக காலை சிற்றுண்டி வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.1,500 வீதம் 100 நாள்களுக்கு ரூ.1,50,000 செலவில் 25 முதியோா்கள் மற்றும் 7 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க சாசனச் செயலரும், முன்னாள் ஆளுநருமான எம்.தீபக்குமாா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். இன்னா்வீல் சங்கச் செயலா் டி.அனிதா தீபக்குமாா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினாா். முன்னதாக, இல்ல காப்பாளா் ஆா்.தேவி வரவேற்றாா். குழந்தைகள் இல்ல பொறுப்பாளா் எல்.அன்பழகன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com