100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ‘வோட் 100%’ என்ற எழுத்துகளின் வடிவில் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் வீனஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனா் மற்றும் தாளாளா் எஸ்.குமாா், வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் ரூபியாள் ராணி, தலைமைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, துணை முதல்வா் அறிவழகன், உடல்கல்வி இயக்குநா் பிரபாகா், உடல்கல்வி ஆசிரியைகள் உமா, எப்சிமேரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com