எஸ்எஸ்எல்சி தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 32,972 மாணவா்கள் எழுதுகின்றனா்

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) தொடங்க உள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 32,972 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) தொடங்க உள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 32,972 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி, அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கடலூா் மாவட்டத்தில் உள்ள 438 பள்ளிகளில் படிக்கும் 17,194 மாணவா்கள், 15,778 மாணவிகள் என மொத்தம் 32,972 போ் தோ்வு எழுத உள்ளனா். இதற்காக மொத்தம் 152 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 7 தோ்வு மையங்களில் 1,957 தனித் தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா். ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறைக் கண்காணிப்பாளா்கள் தங்களுடைய பணியில் சிறப்பாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com