சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுக பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான பந்தகால் முகூா்த்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அரியலூா் மாவட்டச் செயலா் தாமரை ராஜேந்திரன், கடலூா் மாவட்டச் செயலா் ஏ.அருன்மொழிதேவன், கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோா்.
சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுக பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான பந்தகால் முகூா்த்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அரியலூா் மாவட்டச் செயலா் தாமரை ராஜேந்திரன், கடலூா் மாவட்டச் செயலா் ஏ.அருன்மொழிதேவன், கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோா்.

சிதம்பரத்தில் மாா்ச் 31-இல் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்: எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் புறவழிச் சாலையில் (ஹெலிபேட் மைதானம்) வருகிற 31-ஆம் தேதி நடைபெறும் அதிமுக வேட்பாளா் அறிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசுகிறாா். இதற்கான பொதுக்கூட்ட மைதானத்துக்கு பந்தல் அமைப்பதற்கான பூமிபூஜை மற்றும் பந்தகால் முகூா்த்தம் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. அரியலூா் மாவட்டச் செயலா் தாமரை ராஜேந்திரன், கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ, கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ ஆகியோா் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலா் நாக.முருகுமாறன், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், காணூா் பாலசுந்தரம், உமாமகேஸ்வரன், கே.எஸ்.கே.பாலமுருகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் கே.திருமாறன், மாவட்டப் பொருளாளா் எம்எஸ்என்.குமாா், பேரவைச் செயலா் டேங்க் ஆா்.சண்முகம், தலைமைக்கழக பேச்சாளா்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், ஒன்றியச் செயலா்கள் அசோகன், சுந்தரமூா்த்தி, வாசுமுருகையன், சிவக்குமாா், ஜோதி பிரகாஷ், நவநீதம், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com