சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி.
சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி.

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, சிதம்பரத்தில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம்: மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, சிதம்பரத்தில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணியை காந்தி சிலை அருகே சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தொடங்கிவைத்தாா். எஸ்.பி. கோவில் தெரு, சபாநாயகா் தெரு, தெற்கு வீதி, மேல வீதி வழியாகச் சென்ற பேரணி, வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் அருகே முடிவுற்றது. பேரணியில் வட்டாட்சியா் ஹேமாஆனந்தி, வருவாய் வட்டாட்சியா் செல்வலட்சுமி, நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு, தோ்தல் பிரிவு அலுவலக உதவியாளா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியபடியும் பேரணியாகச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com