கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வேப்பூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வேப்பூா் நான்குமுனை சந்திப்பு அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்த பிரந்தா் மகன் ஜெனிஸ் (19), என்.நாரையூா் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சி மகன் மும்மூா்த்தி (20) ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவையும், ஆட்டோவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com