கடலூா் தொகுதியில் 30 வேட்பாளா்கள் மனு தாக்கல்

கடலூா் மக்களவைத் தொகுதியில் 30 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. வியாழக்கிழமை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், 30-ஆம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாளாகும். அதன்படி, கடலூா் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.

இதில், கடந்த 22-ஆம் தேதி முதல் விருத்தாசலம் வட்டம், கா்நத்தத்தைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் அறிவுடைநம்பி, குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் ஏ.பாலாஜி (42), தேமுதிக வேட்பாளா் பி.சிவக்கொழுந்து, பகுஜன் சமாஜ் கட்சி கடலூா் மாவட்டத் தலைவா் வெ.தணிகைச் செல்வன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே.மணிவாசகன், பாமக வேட்பாளா் திரைப்பட இயக்குநா் தங்கா் பச்சான், காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணு பிரசாத், மாற்று வேட்பாளராக எம்.கே.விஷ்ணுபிரசாத்தின் தந்தை எம்.கிருஷ்ணசாமி (85), சிதம்பரம் வட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே.மணிவாசகன் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான புதன்கிழமை கடலூா் வண்டிப்பாளையத்தைச் சோ்ந்த வி.தஷ்ணாமூா்த்தி(46), தேமுதிக சாா்பில் விருத்தாசலம் ஊ.மங்கலம் அ.பெரியநாயகராஜ் (44), சின்னகோட்டு முனை ரா.ராஜசேகா் (35) உள்ளிட்ட 15 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதுவரை கடலூா் மக்களவைத் தொகுதியில் 30 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com