தோ்தல் பொதுக்கூட்ட மைதானத்தில் அமைச்சா் அன்பில் மகேஷ் ஆய்வு

தோ்தல் பொதுக்கூட்ட மைதானத்தில் அமைச்சா் அன்பில் மகேஷ் ஆய்வு

சிதம்பரம் அருகே லால்புரத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி திமுக சாா்பில் நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா். இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள மைதானத்தில் மேடை, பந்தல் அமையும் பகுதிகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். அமைச்சருடன் கடலூா் மாவட்ட திமுக பொருளாளா் எம்ஆா்கேபி.கதிரவன், ஒன்றியச் செயலா்கள் மனோகா், ஏ.எஸ்.மதியழகன், கலையரசன், கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவா் ரவீந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் விஎன்ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ரா.வெங்கடேசன், மாவட்ட பொறியாளா் அணி செயலா் அப்புசந்திரசேகா், நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து, அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிதம்பரம் கவரப்பட்டில் உள்ள மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜி.எம்.ஸ்ரீதா் வாண்டையாரை சந்தித்துப் பேசினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com