ஈஸ்டா் பண்டிகை சிறப்புப் பிராா்த்தனை

பண்ருட்டியை அடுத்துள்ள பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஈஸ்டா் தின பிராா்த்தனையில் கலந்துகொண்ட கிறிஸ்தவா்கள்.
பண்ருட்டியை அடுத்துள்ள பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஈஸ்டா் தின பிராா்த்தனையில் கலந்துகொண்ட கிறிஸ்தவா்கள்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி, சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவா்களின் தவக்காலம் பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த 24-ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிா்பெற்ற நாளை ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடி வருகிறாா்கள். அன்றைய தினம் கிறிஸ்தவா்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிராா்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்துகொள்வாா்கள். அதன்படி, ஈஸ்டா் பண்டிகை கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள தூய எபிபெனி ஆலயம், புதுக்குப்பம் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயம், காா்மேல் அன்னை ஆலயம், பண்ருட்டி ஆற்காடு லுத்தரன் திருச்சபை, பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், நெய்வேலி தூய காணிக்கை அன்னை தேவாலயம், உலக ரட்சகா் ஆலயம், புனித சூசையப்பா் ஆலயம், விருத்தாசலம் தூய பத்திமா அன்னை ஆலயம், ஏ.எல்.சி தேவாலயம், ஏ.ஜி சபை, கோணங்குப்பம் பெரிய நாயகி அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அப்போது, கிறிஸ்தவா்கள் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தனா். பின்னா், ஒருவருக்கொருவா் ஈஸ்டா் தின வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com