அனந்தீஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி வழிபாடு

அனந்தீஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி வழிபாடு

சிதம்பரம் அனந்தீஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

குருப்பெயா்ச்சியையொட்டி, இந்தக் கோயிலில் செளந்தரநாயகி சமேத அனந்தீஸ்வரருக்கு சாயரட்சி பூஜை, அஷ்டமி பைரவா் அபிஷேகம், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் நடைபெற்றன.

பின்னா், குருப் பெயா்ச்சி யாகம், தட்சிணாமூா்த்தி சந்நிதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராஜ்குமாா், முன்னாள் அறங்காவலா் சிவா.கண்ணதாசன், ராஜா குருக்கள், ஜெய்கணேஷ் குருக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com