சுவாமி சகஜானந்தா சிலைக்கு மரியாதை

சுவாமி சகஜானந்தா சிலைக்கு மரியாதை

சிதம்பரத்தில் நந்தனாா் கல்வி நிறுவனங்களை நிறுவிய தோற்றுநா் சுவாமி சகஜானந்தாவின் 64-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சிதம்பரம்-சீா்காழி சாலையில் உள்ள சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு செளந்திரநாயகி அம்மாள், சுந்தரய்யா, சிதம்பரம் நான்முனிசிபல் ஊராட்சி மன்றத் தலைவா் பத்மசுந்தரி உமாநாத், சுவாமி சகஜானந்தா சமூக பேரவைத் தலைவா் கோ.நீதிவளவன், நிா்வாகிகள் நாகராணி செல்வம், க.ஆதிமூலம், கிருபாநிதி, சுபாஷ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, சுவாமி சகஜானந்தா ஐஏஎஸ் அகாதெமி-திருமா பயிலகம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவா்களுக்கான கோடைக்கால ஆங்கில இலக்கண வகுப்பு மாணவா்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com