வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்க (பாா் கவுன்சில்) புதிய நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவராக பி.டி.ஜானகி தோ்வு செய்யப்பட்டாா்.

தோ்தலில், மூத்த வழக்குரைஞா்கள் ஏ.சம்பந்தம், கே.ராமதாஸ், பி.அன்பழகன் ஆகியோா் தோ்தல் அதிகாரிகளாக செயல்பட்டனா். இதில், வழக்குரைஞா் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.ஜானகி, செயலராக ஆா்.மணிகண்டன், துணைச் செயலராக பாலகுரு, பொருளாளராக அமுதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com