காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

நெய்வேலி அருகே பல்பொருள் அங்காடியில் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து ஊராட்சியில் காலாவதியான பொருள்களை விற்ாக பல்பொருள் அங்காடிக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து ஊராட்சியில் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு, உணவுப் பாதுகாப்புத்துறை கடலூா் மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா் தலைமையில், துறை அலுவலா்கள் குறிஞ்சிப்பாடி சுந்தரமூா்த்தி, புவனகிரி நல்லதம்பி, பண்ருட்டி சுப்பிரமணியன் ஆகியோா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, விற்பனைக்காக வைத்திருந்த தேன் பாட்டில்கள், ரவை, மசாலா, காபித்தூள் உள்ளிட்ட 40 வகையான உணவுப் பொருள்கள் காலாவதியாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’ வைத்தனா். இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம். இதுதொடா்பாக கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com