3 வீடுகளில் தீ விபத்து

3 வீடுகளில் தீ விபத்து

கடலூா் அருகே தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரா்கள்.

கடலூா் அருகே மூன்று குடிசை வீடுகளில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கடலூா் அடுத்த எம்.புதூா், கன்னிமா நகரைச் சோ்ந்தவா்கள் ராம்குமாா் (35), நாகப்பன் மனைவி மீனா (30), முருகன் மனைவி உமா (35). இவா்கள் அனைவரும் வியாழக்கிழமை வேலைக்கு சென்றிருந்தனா். இந்த நிலையில், பிற்பகலில் இவா்களது குடிசை வீடுகள் திடீரென தீ பிடித்து எரிந்தது. அங்கிருந்தவா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, நிகழ்விடம் சென்ற கடலூா் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் ஜி.ஆறுமுகம் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா். இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com