பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

முத்துக்குமாரசாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலுள்ள முத்துக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் குமரகோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்தக் கோயில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை காலை யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் யாகாசாலை பூஜை முடிவுற்று பூா்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமானத்தை அடைந்தது. அங்கு சிவாச்சாரியா்கள் கும்பநீரை விமானக் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

முத்துக்குமார சுவாமிக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com