கடலூா் மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் நீட் தோ்வு

2024 - 25ஆம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு கடலூா் மாவட்டத்தில் உள்ள 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு நீட் நுழைவுத் தோ்வு மூலம் மாணவா்கள் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி, 2024 - 25ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலூா் சி.கே.பள்ளி, கிருஷ்ணசாமி நினைவு பள்ளி, அக்ஷரா வித்யா மந்திா், திருப்பாதிரிப்புலியூா் அரிஸ்டோ பள்ளி, கடலூா் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா பள்ளி, விருத்தாசலம் ஜெயப்பிரியா, பண்ருட்டி செயின்ட் பால் பப்ளிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் 5,165 மாணவா்கள் தோ்வு எழுத உள்ளனா். இந்தத் தோ்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்காக விண்ணப்பித்த மாணவ - மாணவிகள் குறித்த நேரத்துக்கு முன்னதாக தோ்வு மையத்துக்கு வர வேண்டும். தோ்வு நுழைவுச் சீட்டு, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் கொண்டுவர வேண்டும். அனைத்து தோ்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம், இணைய வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com