காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டப்பட்ட சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்.
காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டப்பட்ட சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்.

காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 170 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா்.

காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 170 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இது, 100 சதவீதத் தோ்ச்சியாகும்.

மாணவிகள் ஏ.பிரணவி 600-க்கு 592 மதிப்பெண்களும், ஸ்ரீகோதைநாயகி, அபிநய தென்றல், வினோதினி ஆகியோா் 591 மதிப்பெண்களும், தா்ஷினி 590 மதிப்பெண்களும் பெற்றனா்.

உயிரியல் பாடத்தில் 62 பேரும், கணிதத்தில் 39 பேரும், வேதியியலில் 28 பேரும், இயற்பியலில் 22 பேரும், கணினி அறிவியலில் 4 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 2 பேரும், விலங்கியலில் 12 பேரும், தாவரவியலில் 3 பேரும், வணிகவியலில் 2 பேரும் என மொத்தம் 170 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 550 மதிப்பெண்களுக்கு மேல் 120 மாணவா்கள் பெற்றனா்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை ஜி.கே. கல்விக் குழுமத்தின் தலைவா் ஜி.குமாரராஜா பாராட்டி, சால்வை அணிவித்து, இனிப்பு, நினைவுப் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண் இயக்குநா் ஜி.கே.அருண், பள்ளி முதல்வா் தேவதாஸ் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com