தீமிதி திருவிழா: இருவா் காயம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மங்களூரில் நடைபெற்ற கோயில் தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் விழுந்து இருவா் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மங்களூரில் நடைபெற்ற கோயில் தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் விழுந்து இருவா் காயமடைந்தனா்.

மங்களூரில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தீ மிதித்தனா். திட்டக்குடி வட்டம், மங்களூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் தங்கராசு (58), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்துள்ள மரவநத்தம் பகுதியைச் சோ்ந்த வடமலை மகன் ஆறுமுகம் (54) ஆகியோா் இரவு சுமாா் 7.30 மணியளவில் அக்னி குண்டத்தில் இறங்கியபோது, தவறி விழுந்து காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com