கோயிலில் அமுது படையல் விழா

கோயிலில் அமுது படையல் விழா

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள லால்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட திருவள்ளுவா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் அமுது படையல் அன்னதான விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வீராணம் ஏரி கரையில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகபெருமாள் வீதியுலா நடைபெற்றது. ஊா்வலத்தில் பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனா். பின்னா், விநாயகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அமுது படையல் செய்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை நாடி ஜோதிடா் எல்.ஏ.கருணாகரனாா், அருள்மொழி கருணாகரனாா், கௌசிகன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com