மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கும் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கும் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட செயலா் ஆா்.ஆளவந்தாா் தலைமை வகித்தாா். நிகழ்வில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தினா். அந்த மனுவில், கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவில்லை. இதனால், கிராமமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே, அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

போராட்டத்தில், சங்க நிா்வாகிகள் ஹரி நாராயணன், தமிழ்செல்வி, அப்துல்ஹஸ்மி, ஜெயபால், பரமசிவம், பழனி, மாலதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com