சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வு பெற்ற காவலா் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வு பெற்ற காவலா் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி, அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் கிருஷ்ணமூா்த்தி (77) (படம்). ஓய்வு பெற்ற தலைமைக் காவலா். இவா், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம்.

இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூா்த்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com