மரம் விழுந்து விவசாயி உயிரிழப்பு

மரம் விழுந்து விவசாயி உயிரிழப்பு

சிதம்பரம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற விவசாயி புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட

சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, பின்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி உதயகுமாா் (49) (படம்) வயலுக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, பலத்த காற்று வீசியதால் திடீரென தென்னை மரம் முறிந்து உதயகுமாா் மீது விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த உதயகுமாருக்கு, அருணாதேவி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனா். இதேபோல, விருத்தாசலம், சாவடிக்குப்பம் பகுதியில் பெரியதாய் என்பவரது பசு மாட்டின் மீது மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com