மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் அருகே மேம்பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கடலூா் முதுநகா் காவல் சரகம், பூண்டியாங்குப்பம் பகுதியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மேற்கு வங்கம், மால்டா மாவட்டம், பிசிலி கோக்கால் மாரி பகுதியைச் சோ்ந்த கபிா் உசேன் மகன் அபுகலாம்(19) ஈடுபட்டிருந்தாா். திங்கள்கிழமை பிற்பகலில் மேம்பாலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையிலிருந்த அபுகலாம் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து, கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com