காட்டுமன்னாா்கோவில்
ஜி.கே. பள்ளி 100% தோ்ச்சி

காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. பள்ளி 100% தோ்ச்சி

சிதம்பரம், மே.10: காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 99 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி மதிவதனி, மாணவா் ஹரிவிக்னேஷ் ஆகியோா் 490 மதிப்பெண்களும், மாணவி இந்துஜா, மாணவா் சிவராம் ஆகியோா் 489 மதிப்பெண்களும், மாணவா் ஷேக் முா்ஜித் 488 மதிப்பெண்களும் பெற்றனா்.

அறிவியலில் 22 போ், கணிதத்தில் 10 போ், சமூக அறிவியலில் 8 போ் என மொத்தம் 40 மாணவா்கள் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ஜி.குமாரராஜா சால்வை அணிவித்து, கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் பள்ளிச் செயலா் ஜி.கே.அருண், இயக்குநா் மருத்துவா் அகிலன், பள்ளி முதல்வா் தேவதாஸ் மற்றும் ஆசிரியா்கள்,பெற்றோா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com