சிதம்பரம் வீனஸ் பள்ளி 99% தோ்ச்சி

சிதம்பரம், மே 10: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதத் தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 210 மாணவா்களில் 208 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவிகள் கு.நிவிதா 496 மதிப்பெண்களும், சு.விஷ்ருதி 494 மதிப்பெண்களும், ஆ.சுஜித்ரா 493 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

தோ்வெழுதிய 210 மாணவா்களில் 208 போ் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா். 450 மதிப்பெண்களுக்கு மேல் 88 மாணவா்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 58 மாணவா்களும் பெற்றனா்.

கணிதத்தில் 29 போ், அறிவியலில் 8 போ், சமூக அறிவியலில் 11 போ் என மொத்தம் 48 மாணவ, மாணவிகள் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி துணை முதல்வா் மற்றும் ஆசிரியா்களையும் தாளாளா் எஸ்.குமாா், முதல்வா் ரூபியாள் ராணி ஆகியோா் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா். மேலும், பள்ளி துணை முதல்வா் தா.நரேந்திரன் மற்றும் ஆசிரியா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com