தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

சிதம்பரத்தில் காா் நிறுத்துமிடத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டாா்.

சிதம்பரம் வட்டம், தில்லைவிடங்கன் கிராமம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராகுல் (27). இவா், சிதம்பரம் பெரியவாணிய தெருவில் உள்ள தனது சித்தப்பாவுக்குச் சொந்தமான காா் நிறுத்துமிடத்தில் இரவுக் காவலாளி வராததால், வியாழக்கிழமை இரவு அங்கு சென்று தங்கி உள்ளாா்.

வெள்ளிக்கிழமை காலை பகல் காவலாளி வந்து பாா்த்தபோது, ராகுல் அங்கு தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தகலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று ராகுலின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com