சிவபுரி அரசுப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளி தொடா்ந்து 12-ஆவது ஆண்டாக 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 44 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவி கணிஷா 452 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். சிறப்பிடம், தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் க.குமரவேல் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com