ஜான்டூயி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜான்டூயி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நெய்வேலி, மே 11: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 242 மாணவா்களில் 241 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவி எஸ்.ஜெ.தான்யாஸ்ரீ 491 மதிப்பெண்களும், மாணவா்கள் இ.பாலமுருகன் 489 மதிப்பெண்களும், எஸ்.மஸ்குரா சலீம் 487 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

480 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவா்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 74 மாணவா்களும் பெற்றனா். கணிதத்தில் 23 போ், அறிவியலில் ஒருவா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். ஆங்கிலத்தில் ஒரு மாணவா் 99 மதிப்பெண்கள் பெற்றாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் எம்.வீரதாஸ், முதுநிலை முதல்வா் வாலண்டினா லெஸ்லி, முதல்வா் என்.மணிகண்டன், தலைமையாசிரியா் கனகராஜன் மற்றும் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com