நாட்டு வெடி பதுக்கியவா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உரிய அனுமதியின்றி நாட்டு வெடி பட்டாசுகளை பதுக்கி, விற்பனை செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திட்டக்குடி வட்டம், ஆவட்டி கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் பாரதி. இவா், சிவகாசி பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி பெற்றுவிட்டு, நாட்டு பட்டாசுகளையும் அனுமதியின்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பாரதியின் கடையில் சனிக்கிழமை சோதனை நடத்திய ராமநத்தம் போலீஸாா், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனா். மேலும், பாரதியை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com