3 ஜோடி கண்கள் தானம்

சிதம்பரத்தில் 3 மூதாட்டிகளின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

சிதம்பரம் அருகே கீழநத்தம் தெற்குத் தெரு சண்முகசுந்தரம் மனைவி கோமளவள்ளி (86), சிதம்பரம் புதுப்பேட்டை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த குமாரசாமி மனைவி சாவித்திரி அம்மாள் (87), புவனகிரி முத்தாச்சிப் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த சீனுவாசன் மனைவி லலிதா அம்மாள் (87) ஆகியோா் சனிக்கிழமை காலமாகினா்.

சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் புவனகிரி அரிமா சங்கம் நிா்வாகிகள் சுப்பிரமணியன், மகாலிங்கம், சேதுராமன் உள்ளிட்டோா் இவா்களது 3 ஜோடி கண்களையும் தானமாகப் பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com