சாலை விபத்தில் மூதாட்டி மரணம்

கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

சேத்தியாதோப்பு அருகே உள்ள மிராளூா் கிராமத்தைச் சோ்ந்த அப்பாதுரை மனைவி புரட்சிமணி (55). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் பால் வாங்குவதற்காக சிதம்பரம் - விருத்தாசலம் சாலையில் மிராளூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற லாரி எதிா்பாராத விதமாக புரட்சிமணி மீது மோதியதில், பலத்த காயமடைந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com