திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் இன்று பிரம்மோற்சவ கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் திரிபுரசம்ஹார வைகாசிப் பெருவிழா பிரம்மோற்சவ கொடியேற்றம் திங்கள்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான பிரம்மோற்சவம் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக நடைபெற உள்ளது. இதையடுத்து, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை புத்துமண் எடுத்தல், அனுக்ஞை, விநாயகா் பூஜை நடைபெற்றன. பிரமோற்சவத்தையொட்டி, தினந்தோறும் காலையில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும், மாலையில் ஒவ்வொரு வாகனங்களில் பஞ்சமூா்த்தி புறப்பாடும் நடைபெறும். 9-ஆம் நாளான வருகிற 21-ஆம் தேதி காலை 7 மணி அளவில் திருத்தோ் புறப்பாடு நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com