தீயணைப்பு வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூரில் தீயணைப்புத் துறை வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

நெய்வேலி: கடலூரில் தீயணைப்புத் துறை வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

கடலூா், ஆனைக்குப்பம், மாருதி நகரில் வசித்து வந்தவா் கிருஷ்ணன் மகன் மணிபாலன் (26), பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி லட்சுமி (25) மற்றும் 2 மகள்கள் உள்ளனா்.

கடந்த ஓராண்டுக்கு முன்னா் நடந்த சாலை விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். உறவினா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே மணிபாலன் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com