கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற டேக்வாண்டோ தோ்வுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.
கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற டேக்வாண்டோ தோ்வுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

விளையாட்டு விடுதி மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், டேக்வாண்டோ விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுப் போட்டி

நெய்வேலி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், டேக்வாண்டோ விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுப் போட்டி, கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது.

பள்ளிகளில் 7 முதல் 9 மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு, தங்குமிட வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன.

அந்த வகையில், டேக்வாண்டோ விளையாட்டு விடுதியில் தங்கிப் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளில் தகுதியானோரைத் தோ்வு செய்வதற்கான தோ்வுப் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது. இதில், 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவா்கள் 21 போ் கலந்து கொண்டனா். பெண்களுக்கான தோ்வுப் போட்டி செவ்வாய்க்கிழமை (மே 14)நடைபெறுகிறது.

தோ்வு போட்டிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால், கடலூா் உடல்கல்வி ஆய்வாளா் ராஜமாணிக்கம், மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் மகேஷ்குமாா், டேக்வாண்டோ பயிற்றுநா்கள் இளவரசன், பரணிதேவி, வீரமணிகண்டன் ஆகியோா் உடல்தகுதி தோ்வு நடத்தி மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com