கஞ்சா பறிமுதல்: ரௌடி கைது

கடலூா் அருகே கஞ்சா வைத்திருந்த ரௌடியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிவண்ணன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை கம்மியம்பேட்டை மயானம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த திருப்பாதிரிப்புலியூா் குப்பன்குளம் பகுதியைச் சோ்ந்த ரௌடி ஸ்ரீபன்ராஜிடம்(30) சோதனை செய்ததில் 1.100 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.11 ஆயிரமாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com