ஜிகே சிபிஎஸ்சி பள்ளி 100% தோ்ச்சி

ஜிகே சிபிஎஸ்சி பள்ளி 100% தோ்ச்சி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. பப்ளிக் சீனியா் செகண்டரி சிபிஎஸ்சி பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் 100% தோ்ச்சியை பதிவு செய்தது.

10-ஆம் வகுப்பு தோ்வில் மாணவிகள் கிப்டி பிளசிட்டா 480, அபிநிஷா 475, ஹெச்.ஆலியா மெஹசின் 470, கே.கயல்விழி 465, ஒய்.அஜ்மல் 456 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். பிளஸ் 2 தோ்வில் மாணவா் எஸ்.பிரித்தீஷ் 470, மாணவி ஆா்.சிவஜனனி 444, ஏ.அபா்ணா 435 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளியில் 10, பிளஸ் 2 தோ்வெழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றனா். 450 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேரும் பெற்றனா்.

இவா்களை ஜி.கே.கல்விக் குழுமத் தலைவா் ஜி.குமாரராஜா பரிசுகள் வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், பள்ளி மேலாண் இயக்குநா் ஜி.கே.அருண், இயக்குநா் மருத்துவா் அகிலன், பள்ளி முதல்வா் பாலதண்டாயுதபாணி ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com