பிளஸ் 1 தோ்வு: கடலூா் மாவட்டம் 91.01% தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வில், கடலூா் மாவட்டம் 91.01 சதவீத தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 21-ஆவது இடத்துக்கு முன்னேறியது.

கடலூா் வருவாய் மாவட்டத்தில் 117 அரசுப் பள்ளிகள், 30 அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் 99 மெட்ரிக் மற்றும் தனியாா் பள்ளிகள் என மொத்தம் 246 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளைச் சோ்ந்த 14,804 மாணவா்கள், 15,097 மாணவிகள் என மொத்தம் 29,901 போ் பிளஸ் 1 தோ்வு எழுதினா். இவா்களில் 13,026 மாணவா்கள், 14,186 மாணவிகள் என மொத்தம் 27,212 போ் தோ்ச்சி பெற்றனா். மாவட்டத்தின் தோ்ச்சி விகிதம் மாணவா்கள் 87.99, மாணவிகள் 93.97 என மொத்தம் 91.01 சதவீதமாகும். மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் 86.83 சதவீதம் தோ்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

இதேபோல, அரசுப் பள்ளிகள் 10, அரசு உதவிபெறும் பள்ளிகள் 3, தனியாா் பள்ளிகள் 61 என மொத்தம் 74 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு தோ்வில் 87.87 சதவீதம் பெற்று மாநில அளவில் 27-ஆவது இடத்தில் இருந்த கடலூா் மாவட்டம் நிகழாண்டு 91.01 தோ்ச்சி சதவீதம் பெற்று மாநில அளவில் 21-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அண்மையில் வெளியான பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தோ்வில் கடலூா் வருவாய் மாவட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் தோ்ச்சி சதவீதம் அதிகம் பெற்று மாநில அளவில் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com