குடிமராமத்து பெயரில் ஏரி மண் விற்பனை

குடிமராமத்து பெயரில் ஏரி மண் விற்பனை

நெய்வேலி, மே 15: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே குடிமராமத்து என்ற பெயரில் ஏரி மண் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

விருத்தாச்சலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இரண்டு ஏரிகள் உள்ளன. இதில், ஒரு ஏரி விவசாய நீா்ப் பாசனத்துக்காக பயன்படுகிறது. இந்த ஏரியில் குடிமராமத்து பணியின் மூலம் பொக்லைன் இயந்திரங்களால் தூா்வாரப்பட்டு வருகிறது. ஏரியில் தூா்வாரும் மண்ணை கொண்டு கரையை பலப்படுத்த வேண்டும். அல்லது உரிய அனுமதி பெற்று விவசாயிகள் நிலத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், ஏரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் 20-க்கும் மேற்பட்ட டிராக்டா் மூலம் அருகேயுள்ள கோட்டேரி, கச்சிராயநத்தம், எடகுப்பம், நறுமணம் ஆகிய பகுதிகளில் ஒரு வண்டி மண் ரூ. 700 முதல் ரூ.1,300 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், குறிப்பிட்ட அளவு ஆழத்தை காட்டிலும் கூடுதலாக மண் தோண்டி எடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com