குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

சிதம்பரம், மே 15: புவனகிரியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ரெளடியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி காவல் நிலைய சரகத்தில், தலகுளம் இந்திரா நகரில் கடந்த ஏப்.7-ஆம்தேதி ஆரோக்கியதாஸ் (39) வீட்டின் எதிரே நிறுத்தியிருந்த பைக்கை, மேல் புவனகிரி புதுத்தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் பாலாஜி (23) தீயிட்டு எரித்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது புவனகிரி, வடலூா் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

எனவே, இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாலாஜியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com