பொதுப் பணித் துறை அலுவலகம்
 முன் விவசாயிகள் தா்னா

பொதுப் பணித் துறை அலுவலகம் முன் விவசாயிகள் தா்னா

நெய்வேலி, மே 15: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலகம் முன் விவசாயிகள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூா் பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கா மணிமுக்தாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்படி, மணவாளநல்லூா் மற்றும் விருத்தாசலம் நகரப் பகுதியில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தும் வகையில் ரூ.25 கோடியில் தடுப்பணை அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு திட்டம் தயாா் செய்த பின்பு, அந்த தடுப்பணையை திட்டக்குடி பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டுவதற்கு பொதுப் பணித் துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த விவசாயிகள் விருதாச்சலம் பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு அதிகாரியை சந்திப்பதற்காக புதன்கிழமை சென்றனா். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரம் காத்திருந்தும், அதிகாரி வராததால் திடீரென அலுவலகம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, தா்னா கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com