மொபெட் மீது லாரி மோதல்: முதியவா் பலி

கடலூா் மாவட்டம், வடலூரில் மொபெட் மீது லாரி மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணம், திருவெண்ணைய்நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). புவனகிரி வட்டம், கீழகொளக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் கணேசன் (50). இவா்கள் இருவரும் புதன்கிழமை வடலூா் நான்கு முனைச் சந்திப்பு அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி மொபெட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா். கணேசன் கடலூா் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com