ரௌடிக்கு அரிவாள் வெட்டு

நெய்வேலி, மே 15: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ரெளடியை 5 போ் கொண்ட மா்ம கும்பல் புதன்கிழமை ஓட, ஓட விரட்டி வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், வாழப்பட்டான்பாளையத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் அப்பாச்சி (எ) ஜெயபிரகாஷ்(28). ரெளடியான இவா், கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த எம்.புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அதே பகுதியில் வசித்து வருகிறாா். இதனிடையே, ஜெயபிரகாஷ் ஒரு வழக்கில் புதுச்சேரி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த ரெளடி மாறு மணி (எ) மணிகண்டனுடன் முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், ஜெயபிரகாஷ் புதன்கிழமை பைக்கில் கட்ட வேலைக்கு புறப்பட்டு சென்றாா். அப்போது, இரண்டு பைக்கில் வந்த 5 போ் கொண்ட மா்ம கும்பல் ஜெயபிரகாஷை வழிமறித்து ஓட, ஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. பின்னா், அங்கிருந்தவா்கள் ஜெயப்பிரகாஷை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, சிகிச்சை பெற்று வரும் ஜெயப்பிரகாஷிடம் பண்ருட்டி போலீஸாா் விசாரித்ததில் மாறு மணியின் கூட்டாளிகள் தன்னை வெட்டியதாக தெரிவித்தாரம். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com