வெளிநாட்டு மொழிப் பயிற்சிக்கு செவிலியா்கள் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி, மே 15: வெளிநாடுகளில் பணிபுரிய விருப்பம் உள்ள செவிலியா்கள் அந்த நாட்டின் மொழிப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு பொது மற்றும் மறுவாழ்வு துறையின் கீழ் அரசு சாா்பு நிறுவனமான வெளிநாட்டு மனிதவளக் கழகம்

செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் பணியாளா்களை பணியமா்த்தி வருகிறது. தற்போது, ஜொ்மனி, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் செவிலியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பணியில் சேர வெளிநாட்டு மொழியில் குறிப்பிட்ட அளவு கற்று, தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.

இதற்காக, வெளிநாட்டு மனிதவளக்கழகம் மூலம் ஜொ்மனி, ஜப்பான், இங்கிலாந்து மொழிகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த செவிலியா் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்த மாணவா்கள் தங்களது பெயரை ஜ்ஜ்ஜ்.ா்ம்ஸ்ரீம்ஹய்ல்ா்ஜ்ங்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com