ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம், மே 15: சிதம்பரம் ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலை நகா் திருவேட்குளம் பகுதியில் உள்ள இந்தக் கோயிலில் 123-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதன்படி, கோயில் வளாகத்திலிருந்து தோ் புறப்பட்டு, அங்குள்ள சிவன் கோயில் நான்கு வீதிகள் வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. இதில், திருநங்கைகள், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். பின்னா், அரவாணை தேரில் காளி பலிக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியும், காளி ஆட்டமும் நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு அறிவான் ஊா்வலம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் தலைமையில் அந்தப் பகுதி மக்களும், இளைஞா் நற்பணி மன்றத்தினரும் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com